
சிவகங்கை: சிவகங்கையில் கண் மை டப்பா மூடியை விழுங்கிய ஒரு வயது ஆண் குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையைச் சோ்ந்தவா் சூரிய பிரகாஷ், தனது மனைவியின் சகோதரி குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக குழந்தையோடு சிவகங்கை காளவாசல் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்துள்ளனா்.
இந்த நிலையில்,குழந்தை தரன்தேவாவுக்கு பொட்டு வைத்துவிட்டு, கண் மை டப்பாவை அருகிலேயே விட்டுச் சென்றுள்ள நிலையில், மூடியை விழுங்கியதால் குழந்தைக்கு மூச்சுத் திணறல், வாயில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
உறவினர் வீட்டு பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக குழந்தையோடு வந்த நிலையில், குழந்தை உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர், உறவினா்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.