முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் மீதான நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது!

கரூரில் தலைமறைவாக இருந்த எம். ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர் கைது.
yuvaraj
சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட யுவராஜ்.DIN
Published on
Updated on
1 min read

முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் மீதான நில மோசடி வழக்கில் அவருடைய ஆதரவாளர் ஒருவர் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீஸார் கடந்த ஜூன் மாதம் வழக்குப்பதிந்தனர். இதையடுத்து எம். ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவானார்.

35 நாள்களுக்குப் பிறகு ஜூலை 16 ம் தேதி எம்.ஆர். விஜயபாஸ்கரை கேரளத்தில் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். அப்போது அவருடன் பிரவீன் என்பவரும் கைது செய்யப்பட்ட நிலையில், எம். ஆர். விஜயபாஸ்கருக்கு போலி ஆவணம் தயாரிப்பில் உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரிதிவிராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

yuvaraj
விஜய்யுடன் கூட்டணியா? - பிரேமலதா விளக்கம்!

இந்நிலையில், 15 நாள் சிறையில் இருந்த மூவரும் நீதிமன்றக் காவலுக்குப் பிறகு அவர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் என்பவரை கடந்த திங்கள்கிழமை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரதிவ்ராஜ், பிரவீன், சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் சார்லி, எம். ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர் தோட்டக்குறிச்சியை சேர்ந்த செல்வராஜ் என 6பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூரில் தலைமறைவாக இருந்த எம். ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர் யுவராஜ் என்பவரையும் கரூர் சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்தனர். பின்னர் நள்ளிரவு 12 மணி அளவில் யுவராஜ் கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் பரத்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து யுவராஜை திருச்சி மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com