
அரக்கோணம்: அரக்கோணத்தில் அங்கன்வாடியில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் மற்றும் அவரது மகள்,மகன் என மூவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.
அரக்கோணம் சுவால்பேட்டை, காந்திரோடு பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி (45). இவர் அரக்கோணத்தை அடுத்த வளர்புரத்தில் அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மகள் பவித்ரா (25). திருமணமாகாதவர். தனியார் தட்டச்சு பயிற்றுவிப்பு மையத்தில் பணிபுரிந்து வந்தார். மீனாட்சியின் மகன் யுவனேஷ்(20). அரக்கோணம் அருகே தனியார் டயர் தொழிற்சாலையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
சனிக்கிழமை காலை இவர்களது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் மீனாட்சி குடும்பத்தினர் வெளியே வராததை கண்டு கதவை தட்டியபோது கதவு திறக்கப்படவில்லை.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் நகர காவல்நிலைய போலீசார் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மீனாட்சி அவரது மகள், மகன் மூவரும் தனித்தனியே தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மூவரது உடல்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக வேலூர், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.