
மன்னார்குடியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து வியாழக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் நிரந்தர தூய்மைப் பணியாளராக ராஜேஷ்கண்ணன் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், அவ்வப்போது பல்வேறு பணிகளை ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் செய்ய வேண்டுமென என கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தது.
இது குறித்து மன்னார்குடி நகராட்சி ஆணையரிடம் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், ராஜேஷ் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தனர்.
இதனையடுத்து, ராஜேஷ் கண்ணனை அழைத்து நகராட்சி ஆணையர் எஸ்.எம்.சியாமளா விசாரணை செய்துள்ளார்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு மன்னார்குடி பேருந்து நிலையத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை தட்டிக்கேட்ட தூய்மைப் பணியாளரை ராஜேஷ் கண்ணன் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராஜேஷ் கண்ணன் மீது உடனடியாக துறை வரியான சட்ட நடவடிக்கை மற்றும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை காலை ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் சங்கத் தலைவர் வினோத் தலைமையில், செயலர் சதீஷ், பொருளாளர் முனியப்பன் முன்னிலையில், ஒப்பந்த தொழிலாளர்கள் மன்னார்குடி நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து, கண்டன கோஷங்களை எழுப்பி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர்.
இதில் , ஏஐடியுசி நகர நிர்வாகிகள் தனிக்கொடி, எஸ்.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.