
வெம்பக்கோட்டை 3 ஆம் கட்ட அகழாய்வில் சுடுண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ குவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3 ஆம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜீன் 18 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறுகிறது.
முன்னதாக கண்ணாடி மணிகள், கல்மணிகள் மற்றும் பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி, நாயக்கா் கால செம்பு காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் என 1500-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற அகழாய்வு பணியின்போது அலங்கரிக்கப்பட்ட சுடுமண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ குவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் முன்னோா்கள் உணவு அருந்தவோ அல்லது மண்பாண்டங்களின் மூடியாகவோ பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.