

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, தவெக தலைவர் விஜய் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய இதயப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். நீண்ட ஆயுள், மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இன்று(செப். 17) தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில், அவருக்கு முதல்வர் ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.