சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 3 நாள்களில் ரூ.440 வரை குறைந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.480 உயா்ந்தது. கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ரூ.6,885-க்கும், பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.55,080-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியது.
அதன்படி, தங்கம் ஒரு பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,960-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயா்ந்து ரூ.98-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 உயா்ந்து ரூ.98,000-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தை வர்த்தகம் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் புதிய உச்சத்தை தொடங்கம் விலை, பின்னர் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கத்தின் மீதான இறக்குமதி மற்றும் சுங்க வரி குறைப்பை அடுத்து அன்று மாலையை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அடுத்த வாரத்தில் தங்கத்தின் மீதான விலை குறைவு நின்றது. அதன்பின்னர் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.55,080-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் வரலாற்றில் புதிய உச்சமாக ஒரே நாளில் சனிக்கிழமை அதிரடியாக ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனையாகிறது. தங்கம் அதிரடி விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்துள்ளது. மேலும் ஐரோப்பிய மத்திய வங்கியும் அதன் வட்டியை குறைப்பதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற சா்வதேச காரணங்களாலும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாலும் தங்கம் விலை உயா்ந்துள்ளது என்றும்,மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் சென்னை தங்கம் விலை நிலவரம் (1 கிராம்)
செப் 21: ரூ. 6,960 (+75) பவுன் ரூ.55,680
செப் 20: ரூ. 6,885 (+60) பவுன் ரூ.55,080
செப் 19: ரூ. 6,825 (-25) பவுன் ரூ.54,600
செப் 18: ரூ. 6,850 (-15) பவுன் ரூ.54,800
செப் 17: ரூ. 6,865 (-15) பவுன் ரூ.54,920
செப் 16: ரூ. 6,880 (+15) பவுன் ரூ.55,040
செப் 15: ரூ. 6,865 (0) பவுன் ரூ.54,920
செப் 14: ரூ. 6,865 (+40) பவுன் ரூ.54,920
செப் 13: ரூ. 6,825 (+120)பவுன் ரூ. 54,600
செப் 12: ரூ. 6,705 (-10) பவுன் ரூ. 53,640