இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்கள் ஒப்படைப்பு: மோடி

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட பழங்காலப் பொருள்களை அமெரிக்க ஒப்படைத்தது தொடர்பாக...
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்கள் ஒப்படைப்பு: மோடி
Published on
Updated on
1 min read

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்களை ஒப்படைத்ததற்கு அமெரிக்க அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின் போது இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்களை அமெரிக்க அரசு ஒப்படைத்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

"297 விலைமதிப்பற்ற பழங்கால பொருள்களை திருப்பிக் கொடுப்பதை உறுதிசெய்த அதிபர் ஜோ பைடன் மற்றும் அமெரிக்க அரசுக்கு நான் என்னென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பண்பாட்டு பொக்கிஷங்களை சட்டவிரோதமாக கடத்துதல் என்பது நீண்டகால நடந்துகொண்டு இருக்கும் பிரச்னையாகும். இதில், குறிப்பாக இந்தியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.

அமெரிக்க ஒப்படைப்பதாகக் கூறும் பண்பாட்டு பொக்கிஷங்கள் 4000 ஆண்டுகள் பழமையானவை. கி.மு. 2000 - கி.பி. 1900 இடையிலான காலக்கட்டத்தில் இந்தியவின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டவை. பெரும்பாலான கலைப் பொருள்கள் சுடுமண்ணால் செய்யப்பட்ட கிழக்கு இந்தியாவை சேர்ந்தவை. பிற பொருள்கள் கல், மரம், உலோகம் மற்றும் தந்தத்தால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் கூட்டமைப்பின் 4-ஆவது உச்சிமாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நடைபெற்றது.

“டெலாவேர் வில்மிங்டனில் இன்று (செப்.22) நடைபெற்ற க்வாட் உச்சி மாநாட்டின் போது தலைவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. உலகளாவிய நலனுக்காக க்வாட் தொடர்ந்து எவ்வாறு பணியாற்றும் என்ற விவாதங்கள் பயனுள்ளதாக இருந்தது. சுகாதாரம், தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், திறன் மேம்பாடு போன்ற முக்கிய துறைகளில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என மோடி பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com