sanchana
விஜய் சேதுபதியுடன், சஞ்சனா.Instagram / sanchana

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் மகாராஜா பட நடிகை!

மகாராஜா பட நடிகை சஞ்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்.
Published on

மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சஞ்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஏராளமான ரசிகர்கள் பார்க்கின்றனர். கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால், சில மாதங்களுக்கு முன் பிக்பாஸ் - 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என அவர் அறிவித்ததைத் தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டது.

சில நாள்களுக்கு முன்பு, இதுவரை எந்த சீசன்களில் இல்லாத வகையில் பிக்பாஸ் - 8 நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சியை(ப்ரோமோ) மக்கள் மத்தியில் வெளியிடப்பட்டது.

இந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாகக் கூறப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், யாரெல்லாம் பங்கேற்கவுள்ளனர் என்பது குறித்த ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. அதேபோல், இணையத்திலும் போட்டியாளர்கள் குறித்த தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் மகாராஜா. இப்படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சஞ்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாரளராக பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா தொடரில் அறியப்பட்ட நடிகர் அருண், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோரும் போட்டியாளர்களாக இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க நாளில்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com