மேற்கு வங்க மாநிலத்தில் சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு இன்று (செப். 24) விபத்துக்குள்ளானது.
மேற்கு வங்க மாநிலம், அலிபுர்துவார் கோட்டத்தில் உள்ள நியூ மைனகுரி ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன.
ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டதால் ரயில் சேவை பெரிதாக பாதிக்கப்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அலிபுர்துவார் கோட்ட ரயில்வே மேலாளர் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: சென்னையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை!
அலிபுர்துவார் கோட்ட ரயில்வே மேலாளர் அமர்ஜித் கெளதம் கூறுகையில், நியூ மைனகுரி ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. போக்குவரத்தை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.