
சென்னையில் திங்கள்கிழமை(செப்.23) நள்ளிரவு தொடங்கி இன்று(செப்.24) வரை விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதிகபட்சமாக மணலியில் 143 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல் உள்பட சென்னையின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து சாலைகளில் மழை நீர் தேங்கியதால் நள்ளிரவில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
மணலி - 143 மி.மீ.
ஆவடி - 108 மி.மீ.
அம்பத்தூர் - 82 மி.மீ.
மதுரவாயல் - 82 மி.மீ.
திருநின்றவூர் - 80 மி.மீ.
வளசரவாக்கம் - 65 மி.மீ.
திருவேற்காடு - 60 மி.மீ.
செங்குன்றம் - 60 மி.மீ.
சோழவரம் - 55 மி.மீ.
திருவள்ளூர் - 45 மி.மீ.
பள்ளிப்பட்டு - 40 மி.மீ.மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.