
சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்த ரூ.110 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இதுதொடர்பாக இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த சரக்குப் பெட்டகம் ஒன்றை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அதில் இருந்த 112 கிலோ சூடோ எபிட்ரின் என்ற போதைப் பொருள்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கடத்தலுக்கு பயன்படுத்திய 2 சொகுசு கார்கள், ரூ.3.9 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இதேபோன்று நான்கு முறை ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருள்கள் கடத்தியது தெரியவந்துள்ளது.இதில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
போதைப்பொருள் சென்னைக்கு எங்கிருந்து வந்தது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் உற்பத்திக்கு சூடோ எபிட்ரின் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.