பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீதான புகாரை திரும்பப் பெற்ற பாஜக!

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக விடியோ வெளியிட்ட பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீதான புகார் குறித்து..
bjp
லட்டு பரிதாபங்கள் விடியோவில்...படம் | யூடியூப்
Published on
Updated on
1 min read

திருப்பதி லட்டு தொடர்பாக பரிதாபங்கள் யூடியூப் சேனல் விடியோ வெளியிட்டு இருந்த நிலையில், அந்த யூடியூப் சேனல் மீது அளித்த புகாரை பாஜக திரும்பப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக பாஜக செயல்பாட்டாளர் அமர் பிரசாத் ரெட்டி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச் ராஜாவிடம் கோபி மற்றும் சுதாகர் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.

இதனால், பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது நாங்கள் அளித்த புகாரை திரும்பப்பெற முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக புகார்

திருப்பதி லட்டில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாக அறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பரிதாபங்கள் யூடியூப் சேனலில் லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் விடியோ வெளியாகியிருந்தது.

லட்டு பரிதாபங்கள் விடியோவுக்கு எதிர்ப்புகள் அதிகமானதால், அந்த விடியோவை தங்கள் யூடியூப் பக்கத்திலிருந்து பரிதாபங்கள் குழு நேற்று(செப். 26) நீக்கியது

விடியோவை நீக்கி இருந்தாலும், அந்த விடியோ இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் விதமாக இருப்பது மட்டும் அல்லாமல், சமூகங்களுக்கு இடையே பகையை வளர்க்க முயற்சி செய்வதாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை தூண்டும் விதமாக இருப்பதாக தெரிவித்து, ஆந்திர பிரதேச காவல் துறை தலைமை இயக்குநரிடம் பாஜக புகார் அளித்து இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.