முள்ளிப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி
பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் வியாழக்கிழமை(ஏப்.10) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.


பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் வியாழக்கிழமை(ஏப்.10) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. வெளிமாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகளை ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டுப்போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அ.அக்பர்அலி தொடங்கி வைத்தார் .
போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 850 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
காளைகளை அடக்கிய வீரா்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்கள் ஆகியோருக்குப் பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
போட்டியைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்துள்ளனர். இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் ஆா்டிமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...