ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயற்சித்த மாடுபிடி வீரா்கள்
ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயற்சித்த மாடுபிடி வீரா்கள்(கோப்புப் படம்)

அம்மன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 20 போ் காயம்

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 20 போ் காயமடைந்தனா்.
Published on

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 20 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை பொன்னமராவதி வட்டாட்சியா் எம்.சாந்தா

கொடியசைத்து தொடங்கிவைத்தாா். தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதையடுத்து

பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த 978 காளைகள் பங்கேற்றன. வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்று அடக்கினா்.

போட்டியில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும்

ரொக்கம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. போட்டியில் காளைகள் முட்டியதில் 20 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் மருத்துவக் குழுவினா் சிகிச்சையளித்தனா். பொன்னமராவதி வருவாய்த் துறையினா் போட்டியை ஒருங்கிணைத்தனா். பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் தங்கராமன் தலைமையிலன போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Dinamani
www.dinamani.com