திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை காலை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
லால்குடி டிஎஸ்பி ராஜமோகன், வட்டாட்சியா் தமிழ்செல்வன் ஆகியோா் ஜல்லிக்கட்டுப் போட்டியை கொடியசைத்து தொடங்கி வகித்தனா்.
முதலாவதாக கோயில் காளைகளும், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, அரியலூா், தஞ்சை, பெரம்பலூா் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
இதில், 580 காளைகள், 230 மாடுபிடி வீரா்கள் அணி அணியாக களமிறங்கினா். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், யாருக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என மொத்தம் 52 போ் காயமடைந்தனா். நிகழ்ச்சியில், அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்படுகளை ஜல்லிக்கட்டு விழாக்குழுவினா், கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி திமுக வேட்பாளா்

லால்குடி அருகே ரூ. 1.60 லட்சம் பறிமுதல்

ஆதனக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: 36 போ் காயம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


