சிம்ப்ஸன்ஸ் கார்டூனும் டிரம்ப்பின் உடல்நிலையும்! வெளியாகுமா அவரது மருத்துவ அறிக்கை?

அதிபர் டிரம்ப் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையின் அறிக்கை உடனடியாக வெளியிடப்படாததைப் பற்றி...
அதிபர் டிரம்ப்பின் மருத்துவப் பரிசோதனைகளின் அறிக்கை உடனடியாக வெளியிடப்படவில்லை.
அதிபர் டிரம்ப்பின் மருத்துவப் பரிசோதனைகளின் அறிக்கை உடனடியாக வெளியிடப்படவில்லை.
Published on
Updated on
2 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையில் அதன் முடிவுகள் உடனடியாக மக்களுக்கு வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் அதிக வயதான அதிபர் என்ற பெருமையைப் பெற்ற டொனால்ட் டிரம்ப் (வயது 78), கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.11) அமெரிக்காவின் வால்டர் க்ரீட் ராணுவ மருத்துவமனையில் சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக முழு உடல் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் ‘நீங்கள் கற்பனை செய்யும் அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது’ எனவும் ’நான் நன்றாக இருக்கிறேன்’ எனவும் அதிபர் டிரம்ப் கூறியிருந்தாலும் அவரது மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

பாரம்பரியமாக அமெரிக்க அதிபர்களின் உடல் நிலைகள் குறித்தும் மருத்துவப் பரிசோதனைகள் குறித்தும் உலகிற்கு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை அதிபர் டிரம்ப் முற்றிலும் மாற்றியமைத்துள்ளார். முன்னாள் அதிபர் ஜோ பைடனை விட 3 வயது இளையவரான டிரம்ப் பல்வேறு தருணத்தில் பைடனின் உடல் மற்றும் மனநலம் குறித்து வெளிப்படையாக விமர்சித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது அவர் மேற்கொண்டிருக்கும் பரிசோதனைகளின் மீதான மருத்துவர்களின் முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை தயாராகிவிடும் எனக் கூறப்பட்டாலும் அது மக்களுக்கு அதிகாரபூர்வமாக வெளியிடப்படுமா? என்பது தெரியவில்லை.

இதனிடையே டிரம்ப்பின் பரிசோதனைகள் நடைபெற்ற போது வெள்ளை மாளிகையின் வெளியுறவுத் துறை செயலாளர் கரோலின் லியாவிட் கூறுகையில், அவரது மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் மீதான வெள்ளை மாளிகை மருத்துவரின் கருத்துகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், அது வெளியிடப்படும் தேதி எதுவும் அவர் குறிப்பிடவில்லை.

இந்தப் பரிசோதனைகள் முடிந்து வார இறுதியை முன்னிட்டு விமானம் மூலம் ஃபுளோரிடா மாகாணத்திற்குச் சென்ற அதிபர் டிரம்ப் செய்தியாளர்களுடன் பேசுகையில், மருத்துவர்கள் தனது உடல்நிலையை முன்னேற்ற தனது வாழ்க்கை முறைக்குறித்து மருத்துவர்கள் சிறிய ஆலோசனைகள் வழங்கியதாகக் கூறியுள்ளார். இருப்பினும், அந்த ஆலோசனைகள் மற்றும் உடல்நிலையைக் குறித்து அவர் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ள இந்த மருத்துவ அறிக்கையானது கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் அதிபர் டிரம்ப் மீது நடைபெற்ற கொலை முயற்சிக்கு பின்னர் வெளியாகும் அவரது உடல்நிலைக் குறித்த முதல் அதிகாரபூர்வ அறிக்கையாகும்.

முன்னதாக, எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் வரலாற்று சம்பவங்களை முன்கூட்டியே கணிப்பதில் புகழ்பெற்றது அமெரிக்காவின் மிகவும் பிரபலாமான ‘தி சிம்ப்ஸன்ஸ்’ எனும் கார்ட்டூன் தொடர். அதில், அதிபர் டிரம்ப் 2025-ம் ஆண்டின் ஏப்ரல் 12 ஆம் தேதி இறந்துவிடுவார் என்று அந்த கார்டூனில் காட்டப்பட்டிருப்பதாக விடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வந்தது.

அந்த விடியோவில் அதிபர் டிரம்ப் போன்ற வடிவில் உள்ள ஒருவரின் உடல் சவப்பெட்டியினுள் கிடத்தி வைக்கப்பட்டிருப்பது போலவும் அவரைச் சுற்றி முக்கிய அரசியல் தலைவர்கள் நிற்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால், இந்த விடியோவானது உண்மையானது இல்லை இது இணையவாசிகளினால் புனையப்பட்டது எனவும் 2017-ம் ஆண்டு முதல் இதுபோன்ற சர்ச்சைக்குரிய விடியோக்கள் பகிரப்பட்டு வருவதாகவும் இதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் சிம்ப்ஸன்ஸ் நிர்வாகத் தலைமை இயக்குநர் மேட் செல்மேன் எச்சரித்திருந்தார்.

இருப்பினும், இந்த விடியோவில் குறிப்பிட்ட தேதிக்கு முந்தைய நாளான ஏப்.11 ஆம் தேதியில் அதிபர் டிரம்ப் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டது இணையவாசிகளிடையே பேசுப்பொருளாகியுள்ளது.

இதையும் படிக்க:டிரம்ப்புக்கு எதிராகக் கூட்டணி: 125% ஆன அமெரிக்க பொருள்கள் மீதான வரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com