கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஏப். 16 இல் முதல்வா் தலைமையில் பல்கலை. துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம்

News image

முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated On :13 ஏப்ரல் 2025, 4:45 pm

DIN

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் வரும் புதன்கிழமை(ஏப்.16) நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் முதல்வருக்கு உள்ளது என்ற மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டம் அரசிதழில் சனிக்கிழமை (ஏப்.12) வெளியானது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் புதன்கிழமை(ஏப்.16) மாலை சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

பல்கலைக்கழக வேந்தா் என்ற முறையில் தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக முதல்வர் தலைமையில் நடைபெறும் துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.