புனித வெள்ளி: அமைதி, ஒற்றுமை உணர்வு மேலோங்கட்டும்- பிரதமர்

புனித வெள்ளியை முன்னிட்டு இயேசு கிறிஸ்துவின் துணிவையும் தியாகங்களை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

புதுதில்லி: புனித வெள்ளி நாள் கருணை, இரக்கம் மற்றும் எப்போதும் பரந்த மனதுடன் இருக்க நம்மைத் தூண்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாளை புனித வெள்ளியாக நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவமக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதையும் மனிதகுலத்திற்காக அவர் செய்த தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெள்ளிக்கிழமை காலை முதல் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

புனித வெள்ளியையொட்டி, தில்லியில் உள்ள பழமையான தேவாலயமான புனித இதய கதீட்ரலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே, வடகிழக்கு நகரமான குவஹாத்தியில், இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் டான் போஸ்கோ நிறுவனத்தில் மாணவர்கள் புனித வெள்ளி சிறப்பு பிராா்த்தனைகளில் பங்கேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி

புனித வெள்ளியை முன்னிட்டு இயேசு கிறிஸ்துவின் துணிவையும் தியாகங்களை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், இந்த நாள் கருணை, இரக்கம் மற்றும் எப்போதும் பரந்த மனதுடன் இருக்க நம்மைத் தூண்டுகிறது.

"புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நாம் நினைவு கூர்கிறோம். இந்த நாள் கருணை, இரக்கம் மற்றும் எப்போதும் பரந்த மனதுடன் இருக்க நம்மைத் தூண்டுகிறது. அமைதி மற்றும் ஒற்றுமையின் உணர்வு எப்போதும் மேலோங்கட்டும்" என்று கூறியுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இயேசு கிறிஸ்துவின் தியாகங்களை நினைவு கூர்ந்தார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் புனித வெள்ளி வாழ்த்துகள். இரக்கம், மன்னிப்பு, தியாகம் மற்றும் பச்சாதாபம் ஆகியவற்றின் சாராம்சம் நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கட்டும். மனிதநேயம், கருணை மற்றும் அமைதி, ஒற்றுமை உணர்வு எப்போதும் மேலோங்கட்டும்" என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "இந்த புனித வெள்ளி அனைவரது இதயத்திலும் கருணை, இரக்கம் மற்றும் அன்பால் நிரப்பி அனைவருக்கும் அமைதியைக் கொண்டுவரட்டும்" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com