மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்

ஐ.நா. சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும்: மதுரை ஆதீனம் விடியோ

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஐ.நா. பொது சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும் என மதுரை ஆதீனம் விடியோ வெளியிட்டுள்ளார்.
Published on

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஐ.நா. பொது சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும் என மதுரை ஆதீனம் விடியோ வெளியிட்டுள்ளார்.

மதுரை தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள ஆதீனம் மடத்திலிருந்து மதுரை ஆதீனம் ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. உலக நாடுகள் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், ஐ.நா.பொது சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும் என்றார்.

உலக நாடுகளில் நடைபெறும் எந்த விளையாட்டுப் போட்டிகளிலும் பாகிஸ்தான் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. முக்கியமாக இந்தியா பாகிஸ்தான் உடனான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடவே கூடாது என கூறினார்.

பயங்கரவாதத்திலும் மதத்தை சொல்லச் சொல்லி கொடூரமான தாக்குதலை நடத்தியிருப்பது பாகிஸ்தான் தான்.

இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சரியான முடிவை எடுத்துள்ளார். எல்லைக்கதவு மூடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதலுக்கு சீனா தான் ஆயுதங்களை அளித்து உதவுகிறது. சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக தான் செயல்படுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என ஆதீனம் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com