சுனாமி எச்சரிக்கை..
சுனாமி எச்சரிக்கை..(கோப்புப் படம்)

பசிபிக் பெருங்கடலில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! ஈக்வடாரில் சுனாமி எச்சரிக்கை?

ஈக்வடார் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைப் பற்றி...
Published on

பசிபிக் பெருங்கடலின் அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், ஈக்வடார் நாடு பாதிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் எஸ்மெரால்தஸ் நகரத்தின் வடகிழக்கிலிருந்து சுமார் 20.9 கி.மீ. தொலைவிலுள்ள பசிபிக் பெருங்கடலின் அடியில் சுமார் 25 அடி ஆழத்தில் இன்று (ஏப்.25) சுமார் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஈக்வடாரின் வடக்குப் பகுதியிலுள்ள சுமார் 10 மாகாணங்கள் அதிர்வுக்குள்ளானதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தினால் பின் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுவதினால் அந்நாட்டு அதிகாரிகள் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த அதிர்வுகளினால் அப்பகுதியிலுள்ள சில கட்டடங்கள் சேதாரமடைந்திருந்தாலும் நல்வாய்ப்பாக எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஈக்வடாரில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் பின்னர் அது வாபஸ் பெறப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:20 ஆண்டுகளாக கோமா நிலையிலுள்ள சௌதி இளவரசர்! என்ன காரணம்?

X
Dinamani
www.dinamani.com