சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

20 ஆண்டுகளாக கோமா நிலையிலுள்ள சௌதி இளவரசர்! என்ன காரணம்?

சௌதி அரேபியாவின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் 20 ஆண்டுகளாக கோமா நிலையிலுள்ளதைப் பற்றி...

இளவரசர் அல்-வாலித் பின் காலித் பின் தலால் கடந்த 20 ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ளார். - எக்ஸ்

Published On :25 ஏப்ரல் 2025, 9:28 pm IST

சௌதி அரேபியா நாட்டின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஒருவர் சுமார் 20 ஆண்டுகளாக கோமா நிலையிலுள்ளார்.

சௌதி அரேபியாவை ஆளும் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் அல்-வாலீத் பின் காலெத் பின் தலால், தூங்கும் இளவரசர் (ஸ்லீபிங் பிரின்ஸ்) என வர்ணிக்கப்படும் இவர் அந்நாட்டை நிறுவிய முன்னாள் அரசர் அப்துல் அஜீஸின், கொள்ளுப்பேரன் ஆவார்.

இவர் கடந்த 2005-ம் ஆண்டு ராணுவக் கல்லூரியில் பயின்று வந்தபோது நேரிட்ட வாகன விபத்தினால், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, கோமா நிலைக்குச் சென்ற அவரை அந்நாட்டு தலைநகர் ரியாத்திலுள்ள கிங் அப்துல் அஜீஸ் மருத்துவ நகரத்திலுள்ள மருத்துவ உபகரணங்கள் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக உயிருடன் வைத்துள்ளனர்.

இளவரசர் அல்-வாலீதை பரிசோதனைச் செய்த மருத்துவர்கள் அனைவரும், அந்த உபகரணங்களின் செயல்பாடுகளை நிறுத்தி அவரை மரணமடைய செய்ய பரிந்துரைத்தபோதும், அவரது தந்தையான இளவரசர் காலெத் பின் தலால் அல் சௌத் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

‘தனது மகன் மரணிக்க வேண்டுமென கடவுள் நினைத்திருந்தால், அவர் விபத்திலேயே இறந்திருப்பார்’ எனக் கூறும் அவர் ஒரு நாள் நிச்சயம் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் அவரை கவனித்து வருகிறார்.

முன்னதாக, கடந்த ஏப்.18 ஆம் தேதி அன்று இளவரசர் அல்-வாலீத் தனது 36 வது பிறந்த நாளை கோமா நிலையிலேயே அடைந்துள்ளார். அதன் பின்னர், அவரது நிலை குறித்தும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2019-ல் இளவரசர் அல்-வாலீத்தின் உடலில் சிறியளவிலான அசைவுகள் உண்டானது எனக் கூறப்பட்டது. அவர் தனது கை விரலை உயர்த்தினார் என்றும் தலையை அசைத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டாலும் அவர் முழுவதுமாக குணமடையவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.