குடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுதொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்திஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு! சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!
/

ஈரான் மீதான போரைத் தீவிரப்படுத்த வேண்டாம்: டிரம்ப்பை வலியுறுத்திய சௌதி இளவரசர்

ஈரான் மீதான போரைத் தீவிரப்படுத்த வேண்டாம் என சௌதி இளவரசர் டிரம்ப்பை வலியுறுத்தியது பற்றி...

News image

சௌதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - கோப்புப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 8:33 am IST

ஈரான் மீதான போரைத் தீவிரப்படுத்த வேண்டாம் என சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வலியுறுத்தினார்.

அமெரிக்கா - ஈரான் இடையே ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இருதரப்பும் மீண்டும் போரில் களமிறங்கியுள்ளன.

இந்தப் போரில், ஈரானின் முக்கிய கட்டமைப்புகளின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகளின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, பல்வேறு நாட்டின் தலைவர்கள் தங்களது மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

அந்த அழைப்பில் முகமது பின் சல்மான், “அமெரிக்கா ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைத்தாலோ அல்லது பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மீது பெரும் தாக்குதல்களை நடத்தினாலோ, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சௌதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தக்கூடும். எனவே, ஈரான் மீதான புதிய தாக்குதல்களைத் தொடங்க வேண்டாம் என வலியுறுத்துகிறேன்” என்று டொனால்ட் டிரம்ப்பிடம் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலித்து வந்ததைத் தொடர்ந்து, இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Saudi Crown Prince Mohammed bin Salman urged US President Donald Trump not to escalate the war with Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.