/

சௌதிக்கும் ஹௌதிக்கும் இடையே தொடரும் மோதல்! 8 கப்பல்கள் வழிமறிப்பு!

சௌதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பல்களின் பாதையை முடக்கிய ஹௌதி படைகள்...

News image

ஹவுதி படையின் செய்தித்தொடர்பாளர் யஹியா சரீ - சௌதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான்... - கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:43 pm IST

சௌதி அரேபியாவின் 8 எண்ணெய்க் கப்பல்களை வழிமறித்து திசைத் திருப்பியதாக யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், ஈரானுக்கு ஆதரவாக யேமனின் ஹௌதி படைகள் களமிறங்கியுள்ளன.

உலகின் 12 சதவிகித வணிகப் போக்குவரத்து நடைபெறும் செங்கடல் பகுதியின் ஒரே நுழைவு வாயிலான, பாப் அல்-மண்டப் நீரிணையை ஈரானின் ஆதரவு பெற்ற ஹௌதிகள் கட்டுப்படுத்தி வரும் நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அவ்வழியாகச் செல்ல முயன்ற சௌதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சௌதி அரேபியா மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து ஹௌதிகள் மற்றும் இராக்கில் செயல்பட்டு வரும் ஆயுதப்படைகளின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாப் அல்-மண்டப் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற 8 எண்ணெய்க் கப்பல்களை இடைமறித்து திசைத் திருப்பி அனுப்பியதாக, ஹௌதி கிளர்ச்சிப்படையின் செய்தித்தொடர்பாளர் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கப்பல்கள் இடைமறிக்கப்பட்ட நேரம், நாள் உள்ளிட்ட விவகரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், சௌதி அரசின் தரப்பிலிருந்தும் இதுபற்றி எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

ஏற்கெனவே, கடந்த ஜூலை 20 முதல் பாப் அல்-மண்டப் நீரிணை வழியாக சௌதி அரேபியாவின் கப்பல்கள் செல்வதற்கு ஹௌதிகள் தடை விதித்துள்ளனர். இதையடுத்து, சௌதி அரசுக்கு எதிரான தங்களின் நடவடிக்கைகள் தொடரும் என ஹௌதி படைகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Yemen's Houthi rebels have announced that they intercepted and diverted eight Saudi Arabian oil tankers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.