ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தூத்துக்குடி தும்பு கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான தும்புகள் எரிந்து நாசம்

தூத்துக்குடியில் உள்ள தும்பு ஏற்றுமதி செய்யும் கிடங்கில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தும்புகள் எரிந்து நாசமானது.

News image
தும்பு ஏற்றுமதி செய்யும் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தீயணைப்பு வீரர்கள்.
Updated On :26 ஏப்ரல் 2025, 3:43 am

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள தும்பு ஏற்றுமதி செய்யும் கிடங்கில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தும்புகள் எரிந்து நாசமானது.

தூத்துக்குடி வி.இ.சாலையில் தனியார் வணிக வளாகம் எதிரே தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த கிருஷ்ண சங்கர் என்பவருக்கு சொந்தமான தும்பு கிடங்கு உள்ளது. இங்கிருந்து தும்புகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்தக் கிடங்கில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்ட அங்கிருந்த காவலாளி இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

இதில் பல லட்சம் மதிப்பிலான தும்புகள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து மத்திய பாகம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.