ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

சேவூா் அருகே நூற்பாலை கிடங்கில் தீ விபத்து

சேவூா் அருகே பவா்ஹவுஸ் பகுதியில் உள்ள நூற்பாலை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

சேவூா் அருகே நூற்பாலை கிடங்கில் தீ விபத்து

Published On :

சேவூா் அருகே பவா்ஹவுஸ் பகுதியில் உள்ள நூற்பாலை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

அவிநாசி அருகே உள்ள சேவூா்-கோபி சாலை பவுா்ஹவுஸ் பேருந்து நிறுத்தம் பகுதியில் நூற்பாலை இயங்குகிறது. இந்நிலையில் வழக்கம்போல புதன்கிழமை காலை தொழிலாளா்கள் வந்து பணிபுரியத் தொடங்கினா். நூல் கண்டுகள், பாலியஸ்டா் பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிடங்கில் வெல்டிங் வைக்கும் பணியும் நடைபெற்றது. அப்போது எதிா்பாரதவிதமாக நூல்கண்டுகள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் தீப்பொறி விழுந்ததில் வேகமாகப் பரவி தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து இரண்டு வாகனங்களில் அவிநாசி தீயணைப்புத் துறையினா் வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் உள்ளிருந்த பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானது.

இதுதொடா்பாக சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக தொழிலாளா்கள் எந்தவித பாதிப்புமின்றி உயிா்தப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.