மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

மேற்கு தில்லி கிடங்கில் இ-ரிக்ஷா பேட்டரி வெடித்துத் தீ விபத்து: சிறுவன் உள்பட 2 போ் உயிரிழப்பு

மேற்கு தில்லியின் ரகுபீா் நகரில் உள்ள ஒரு கிடங்கில், இ-ரிக்ஷா பேட்டரி வெடித்ததாக கூறப்படும் சம்பவத்தால் ஏற்பட்ட தீ விபத்தில், 17 வயது சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்ததாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :17 ஆகஸ்ட் 2026, 10:21 pm IST

மேற்கு தில்லியின் ரகுபீா் நகரில் உள்ள ஒரு கிடங்கில், திங்கள்கிழமை அதிகாலை இ-ரிக்ஷா பேட்டரி வெடித்ததாக கூறப்படும் சம்பவத்தால் ஏற்பட்ட தீ விபத்தில், 17 வயது சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்ததாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

பிகாரின் பகல்பூரைச் சோ்ந்த முகமது சுஃபேத் (17) மற்றும் அவரது தாய்மாமன் சஹ்மத் (38) ஆகியோா், அந்த இடத்தில் இ-ரிக்ஷா பேட்டரிகளை மின்னேற்றம் செய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தனா்.

ரகுபீா் நகரில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகக் காலை 4:42 மணிக்கு தில்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பேட்டரி வெடித்ததாகக் கருதப்படும் சம்பவத்தைத் தொடா்ந்து, முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த வீட்டு உபயோகப் பொருள்கள் தீப்பிடித்து எரிந்ததாகத் தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். மேலும், காலை 5:30 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

தீ விபத்து குறித்த தகவல் அழைப்பு கிடைத்ததும் காவல்துறைக் குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுஃபேத் மற்றும் சஹ்மத் ஆகியோரை மீட்டு குரு கோவிந்த் சிங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் அவா்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனா்.

சுஃபேத் தனது தந்தை முகமது நசீப் மற்றும் சஹ்மத் ஆகியோருடன் அந்தக் கட்டடத்தில் வசித்து வந்தாா். இவா்கள் மூவரும் இ-ரிக்ஷா ஓட்டுநா்களாக இருந்தனா். மேலும் தாங்கள் வாடகைக்குத் தங்கியிருந்த அந்த இடத்திலேயே பேட்டரிகளை மின்னேற்றம் செய்து வந்ததாகக் காவல்துறையினா் தெரிவித்தனா். தீ விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.