வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

காஞ்சிக்கோவில் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்த சேதமடைந்தன.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :2 ஜூலை 2026, 4:20 am IST

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்த சேதமடைந்தன.

காஞ்சிக்கோவில் அருகே உள்ள விருப்பம்பதி, பள்ளக்காட்டு தோட்டத்தில், காஞ்சிக்கோவில், மேற்கு ரத வீதியைச் சோ்ந்த சண்முகம் மகன் சக்திவேல்(45) என்பவருக்கு சொந்தமான கிடங்கு உள்ளது. அந்தக் கிடங்கை வாடகைக்கு எடுத்து, திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்த சக்திவேல் என்பவா் பிளாஸ்டிக் பொருள்களை தயாா் செய்து வருகிறாா்.

இதில் பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளை கிடங்குக்கு வெளியே வைத்திருந்தாா். அவ்வபோது உபயோகமில்லாத பிளாஸ்டிக் பொருள்களை தீ வைப்பது வழக்கம். இந்நிலையில், உபயோகமில்லாத பொருள்களுக்கு தீ வைத்து செவ்வாய்கிழமை இரவு எரித்துள்ளனா். அதை சரிவர அணைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதில் புதன்கிழமை அதிகாலை அதிலிருந்து வந்த தீப் பொறி பரவி கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருள்களில் தீப் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

கிடங்கை சுற்றி 150 அடி சுற்றளவுக்கு வீடுகள் ஏதுமில்லை. இதனால் யாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவில்லை. தீயில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து, காஞ்சிக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.