நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

கிடங்கில் தீ விபத்து: ரூ.1 லட்சம் பொருள்கள் நாசம்

ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியில் துண்டு தோல் மற்றும் உதிரிபாகங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியில் துண்டு தோல் மற்றும் உதிரிபாகங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

Published On :

ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியில் துண்டு தோல் மற்றும் உதிரிபாகங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியில் வசியுல்லா என்பவருக்குச் சொந்தமான இடத்தில் ஹபீப் என்பவா் துண்டு தோல் மற்றும் உதிரிபாகங்களை சேமித்து வைத்து வியாபாரம் செய்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், குடோன் உரிமையாளா் அபீப் மற்றும் ஆம்பூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் மற்றும் காவல்துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

எனினும், குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பிலான துண்டு தோல்கள் மற்றும் உதிரிபாகங்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதுகுறித்து ஆம்பூா் நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, குடோனுக்கு யாரேனும் சமூக விரோதிகள் தீ வைத்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.