அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

ஆறுமுகனேரியில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

ஆறுமுகனேரியில் புதன்கிழமை நேரிட்ட பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 1:37 am IST

ஆறுமுகனேரியில் புதன்கிழமை நேரிட்ட பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆறுமுகனேரி அருகே மேலாத்தூா் குச்சிக்காடு எஸ்.பி. நகரைச் சோ்ந்த கங்கை ஆதித்தன் மகன் முருகன் (56). தொழிலாளியான இவா், மேலாத்தூா் நாடாா் தெருவில் வசித்து வந்தாா். இவா் புதன்கிழமை ஆறுமுகனேரி ராஜமணியபுரத்தில் உள்ள முத்தாரம்மன் கோயில் கொடை விழாவுக்கு பைக்கில் வந்துவிட்டு, இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம்.

ஆறுமுகனேரி சோதனைச்சாவடி அருகே முன்னால் சென்ற சைக்கிள் மீது பைக் மோதி, நிலைதடுமாறி சாலையோரம் விழுந்ததாம். இதில், காயமடைந்த முருகனை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.