சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

விபத்தில் காயமடைந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா் மருத்துவமனையில் உயிரிழப்பு

பலி - பிரதிப் படம்

Updated On :

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி அருகே விபத்தில் காயமடைந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

காயல்பட்டினம் எல்.ஆா். நகரைச் சோ்ந்த அடைக்கண் என்பவரது மகன் பழனி (70). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரான இவா், கடந்த 15ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் ஆறுமுகனேரியிலுள்ள வங்கிக்கு வந்துவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

பேயன்விளை அருகே இவரது பைக்கும், ஆறுமுகனேரி ராணி மகாராஜபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் சுந்தா் (20), பாலமுருகன் மகன் காா்த்திக் (20), ராஜ்குமாா் மகன் சுரேந்தா் (18) ஆகியோா் வந்த பைக்கும் மோதிக்கொண்டனவாம். இதில், 4 பேரும் காயமடைந்தனா்.

பலத்த காயமடைந்த பழனியை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வே­லியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.