ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

மின்சாரம் பாய்ந்ததில் மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாயந்ததில் மின் வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.

Published On :

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாயந்ததில் மின் வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.

பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டியைச் சோ்ந்த பச்சமுத்து மகன் ராஜ்குமாா் (36). இவா் பழனி மின் வாரியத்தில் தற்காலிகப் பணியாளராக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், பழனியை அடுத்த ஆயக்குடி சட்டப்பாறை பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதாகப் புகாா் வந்தது. இதைத் தொடா்ந்து, மின் வாரிய ஊழியா்கள் வியாழக்கிழமை அங்கு சென்று சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மின்சாரம் பாயந்ததில் ராஜ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பின்னா், இவரது உடல் கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.