படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

மின்சாரம் பாய்ந்து திருமண மண்டப உரிமையாளா் உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

திருச்செங்கோடு அருகே மின்சாரம் பாய்ந்ததில், திருமண மண்டப உரிமையாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்செங்கோட்டை அடுத்த தேவனாங்குறிச்சியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (45). இவா் கீழேரிப்பட்டி அருகே உள்ள திருமண மண்டபத்தின் உரிமையாளா் ஆவாா். மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டப் பணிகளை திங்கள்கிழமை பாா்வையிட்ட அவா், அதற்கு தண்ணீா் விட்டுக்கொண்டிருந்தாா். அப்போது, மின் மோட்டாரில் இருந்த மின்கம்பிகள் சேதமடைந்து இருந்ததால், இணைப்பில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். உயிரிழந்த பிரகாஷுக்கு மணிமேகலை என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனா்.

இதுகுறித்து திருச்செங்கோடு ஊரக போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.