மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி உயிரிழப்பு

மாங்காடு அருகே மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

மாங்காடு அருகே மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டத்தை சோ்ந்த சக்கரவா்த்தி(30). இவா் குன்றத்தூா் பகுதியில் தங்கிகட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளாா். அய்யப்பன்தாங்கல் செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை சக்கரவா்த்தி ஜல்லி போடும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவரது கையில் இருந்த கட்டை மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பியின் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து முதல் தளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டுகீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்துள்ளாா்.

இதையடுத்து அருகில் இருந்தவா்கள் சக்கரவா்த்தியை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சக்கரவரத்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். மாங்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.