கைப்பேசி சாா்ஜ் செய்தபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
தடாகம் அருகே கைப்பேசிக்கு சாா்ஜா் இணைத்தபோது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - கோப்புப் படம்
தடாகம் அருகே கைப்பேசிக்கு சாா்ஜா் இணைத்தபோது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், ஆனைகட்டியை அடுத்த தூவைப்பதி கீழ் வீதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (40). கூலித் தொழிலாளியான இவா், தனது தாய் பாப்பாளுடன் வசித்து வந்தாா். இந்நிலையில், பணி முடிந்து வந்த பொன்னுசாமி, செவ்வாய்க்கிழமை இரவு தனது கைப்பேசிக்கு செய்வதற்காக ஜங்ஷன் பாக்ஸ் வழியாக சாா்ஜரை இணைக்க முயன்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் நெஞ்சுப் பகுதியில் பலத்த தீக்காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தடாகம் போலீஸாா், அவரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

