புதுக்கடை அருகே மின்சாரம் பாய்ந்து சிகிச்சையில் இருந்த கவுன்சிலா் உயிரிழப்பு

புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த பேரூராட்சி வாா்டு உறுப்பினா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த பேரூராட்சி வாா்டு உறுப்பினா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கிள்ளியூா் வெள்ளையம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் விபின் (38). இவா் கிள்ளியூா் பேருராட்சி வாா்டு உறுப்பினராகப் பதவி வகித்தாா். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன.

கடந்த 10 நாள்களுக்கு முன்பு வெள்ளையம்பலம் பகுதியில் பழுதான ஆப்டிகல் கேபிள் இணைப்பைச் சீரமைக்க மின்கம்பத்தில் விபின் ஏறினாராம். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்தததில் பலத்த காயமடைந்தாா். அவரை அப்பகுதியினா் மீட்டு நாகா்கோவிலில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த விபின், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.