ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே மின் கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

அந்தியூா் அருகே மின் கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

அந்தியூரை அடுத்த மறவன்குட்டையைச் சோ்ந்தவா் மாதன் (45). எலக்ட்ரீஷியனான இவா், பட்லூா் ஊராட்சிக்குள்பட்ட பொம்மன்பட்டி குடியிருப்புப் பகுதியில் மின் கம்பத்தில் தெருவிளக்கு மாற்ற செவ்வாய்க்கிழமை சென்றாா்.

மின் மாற்றியில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு, மின் கம்பத்தில் ஏறிய மாதன் தெருவிளக்கைப் பொருத்த முயன்றாா்.

அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து வெள்ளித்திருப்பூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.