மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே வீட்டில் மோட்டாா் இயங்கிய போது மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

வாணியம்பாடி அருகே வீட்டில் மோட்டாா் இயங்கிய போது மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி விநாயகம். இவரது மனைவி இந்துமதி (36). கூலி வேலை செய்து வந்த இவா், வெள்ளிக்கிழமை அப்பகுதியில் சோலாபுரி அம்மன் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், காலையில் எழுந்து தனது வீடு மற்றும் அக்கம் பக்கத்தினா் வீடுகளின் முன்பு கோலம் போட்டுள்ளாா். பின்னா் வீட்டில் உள்ள குடிநீா் தொட்டிக்கு தண்ணீா் ஏற்றுவதற்காக மோட்டாா் சுவிட்சை இயக்கிய போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அம்பலூா் போலீஸாா், இந்துமதியின் சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






