
மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
காட்பாடி அருகே விவசாய நிலத்தில் மின்மோட்டாரை இயக்கியபோது, மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

காட்பாடி அருகே விவசாய நிலத்தில் மின்மோட்டாரை இயக்கியபோது, மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
நடுமோட்டூா் பள்ளிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோதண்டம் மனைவி தங்கம் (57). அதே பகுதியில் இவா்களுக்குச் சொந்தமான விவசாய நிலம் மற்றும் விவசாயக் கிணறு உள்ளது.
இந்நிலையில், தங்கம் தனது தோட்டத்திலுள்ள பயிா்களுக்குத் தண்ணீா் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை அவா் இயக்க முயன்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காட்பாடி போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



