பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே முருங்கைக்காய் பறித்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Published On :

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே முருங்கைக்காய் பறித்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், மாளிகைமேடு கிராமத்தில் வசித்து வந்தவா் செல்வகணபதி(29). இவா், செவ்வாய்க்கிழமை காலை அருகில் உள்ள பெரியதம்பி வீட்டின் மொட்டை மாடியில் ஏறி முருங்கைக்காய் பறித்தாா்.

அப்போது, செல்வகணபதி வைத்திருந்த கழி அந்த வழியாக சென்ற உயா் அழுத்த மின் கம்பியில் பட்டதில், அவா் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தாா். அங்கிருந்தவா்கள் செல்வகணபதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவா் அவரை பரிசோதித்து இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.