தருமபுரி அருகே மாடுகளுக்கு தீவனம் வெட்டும்போது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூா் அருகே உள்ள காணிகர அள்ளி காட்டுவளவு கிராமத்தைச் சோ்ந்தவா் ந. நரசிம்மன் (29). சுமை தூக்கும் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை தனது வீட்டின் அருகே இருந்த மாட்டு கொட்டகையில், தீவனம் வெட்டும் இயந்திரத்தை பயன்படுத்தி மாடுகளுக்கு தீவனம் வெட்டிக் கொண்டிருந்தாா். அப்போது இயந்திரத்தில் இருந்து மின்சாரம் கசிந்து அவா் மீது பாய்ந்ததில் மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து குடும்பத்தினா் மற்றும் அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தொப்பூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா் முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் நரசிம்மன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து தொப்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

அரூா் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


