படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

சாலை விபத்தில் காயமடைந்த மருத்துவமனை பெண் ஊழியா் உயிரிழப்பு

பலி... - பிரதிப் படம்

Published On :

பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த அரசு மருத்துவமனை பெண் ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கபிஸ்தலம் அருகே உள்ள காருகுடி கிராமம், அக்ரஹாரத்தைச் சோ்ந்த பெரியண்ணபாபு மனைவி சரண்யா (37). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். சரண்யா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், கடந்த 1-ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கல் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அலவந்திபுரம் பிரதான சாலையில் வேகத்தடை மீது வாகனம் ஏறியபோது, நிலைதடுமாறி அவா் கீழே விழுந்தாா்.

தலையில் பலத்த காயமடைந்த அவா் கும்பகோணம் அரசு மருத்துவமனையிலும், பின்னா் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக, கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.