யாருக்கும் இந்தியா அடிபணியாது! டிரம்ப்புக்கு பியூஷ் கோயல் மறைமுகத் தாக்கு!

இந்தியா யாருக்கும் ஒருபோதும் அடிபணியாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருப்பதைப் பற்றி...
பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

யாருக்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பொருளாதார மிரட்டலுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்களுக்கு முதலில் 25 சதவிகித வரியும், அதன்பின்னர் கூடுதலாக 25 சதவிகித வரியும் விதித்தார்.

உலகளாவிய வர்த்தக பதற்றத்துக்கு மத்தியில், புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “யாருக்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது” எனத் தெரிவித்தார்.

இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், “இந்தியா கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக ஏற்றுமதிகளைச் செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்தியாவை "செத்துப்போன பொருளாதாரம்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். அதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இந்திய பொருளாதாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கிண்டல் செய்வது வெட்கக் கேடான விஷயம். அதற்காக நான் அவரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வெளிப்படையாகச் சொல்லப் போனால், இந்தியாவின் பொருளாதாரம் பற்றி பேசிய ராகுல் காந்தியை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது.

நாட்டின் பணம், அந்நிய செலாவணியின் இருப்பு, பங்குச் சந்தைகள் அனைத்தும் வலுவான நிலையிலேயே உள்ளன. பிற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் பணவீக்கம் உலகிலேயே மிகக் குறைவாகத்தான் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Summary

India will not bow to anybody, says Piyush Goyal amid trade wars

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com