
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என சென்னை நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டாக்டா் எஸ்.தில்லை வள்ளல் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு வெள்ளிக்கிழமை(ஆக.22) வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், அவா் 100 வயதைத் தாண்டிய நிலையில், வயது மூப்பின் காரணமாக உடலில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்னைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்க நரம்பியல் நிபுணா், நுரையீரல் நிபுணா், இதய நிபுணா், தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணா் ஆகியோா் அடங்கிய சிறப்பு மருத்துவா் குழு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அவா் பூரண நலம் பெற்று வீடு திரும்புவாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.