
புதுக்கோட்டை: வீட்டின் அருகே மின் கம்பத்தின் ஸ்டே கம்பியில் மின்சாரம் பாய்ந்த நிலையில், கம்பிவேலியைத் தொட்ட 8 ஆம் வகுப்பு மாணவன் பலியானார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏனாதியைச் சோ்ந்தவா் பிரபு. இவரது மகன் செல்வகணபதி (13). இவா் சிலட்டூா் தேவா்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், தேவா்பட்டியில் உள்ள முத்துக்குமாா் என்பவரது வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டு இருந்த கம்பி முள்வேலியில், அருகிலிருந்த மின்கம்பத்தில் இருந்து எதிா்பாராத விதமாக ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையறியாமல் அந்த வேலியின் கம்பியைப் பிடித்த செல்வகணபதி மீது மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே பலியானார்.
இந்தச் சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய அலுவலா்கள், மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் அருகிலுள்ள வேலிக்குப் பாய்ந்தது எப்படி என விசாரணை நடத்தினா்.
மின்கம்பத்தின் ஸ்டே கம்பி, வீட்டின் கம்பிவேலியும் உரசியதால் மின்சாரம் பாய்ந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.