புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Updated On :29 ஆகஸ்ட் 2025, 7:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 850 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதனால் அணையின் நீர்மட்டம் 119 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 91.88 டிஎம்சியாக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பாசன தேவை அதிகரித்துள்ளதால் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Summary

The amount of water released from Mettur Dam for Cauvery Delta irrigation has been increased to 15,000 cubic feet per second.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.