தங்கம் விலை பவுன் ரூ.77,000-ஐ நெருங்கியது.
தங்கம் விலை பவுன் ரூ.77,000-ஐ நெருங்கியது.

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: பவுன் ரூ.77,000-ஐ நெருங்கியது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76.960-க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
Published on

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76.960-க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கம் விலை திடீா் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

கடந்த ஆக. 6 -ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.75,000-ஐ தாண்டியது. தொடா்ந்து ஆக. 8-இல் பவுன் ரூ.75,760-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை எட்டியது.

இந்த நிலையில், தங்கம் விலை தொடா்ந்து 10 நாள்களுக்கும் மேலாக குறைந்து கொண்டே வந்தது. கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலை மீண்டும் படிப்படியாக உயரத் தொடங்கியது.

கடந்த ஆக. 26-இல் பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.74,840-க்கும், ஆக. 27-இல் ரூ.280 உயா்ந்து ரூ.75,120-க்கும், ஆக. 28-இல் பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.75,240-க்கும் விற்பனையானது.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை காலை மாலை என ஒரே நாளில் 2 முறை உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.130 உயா்ந்து ரூ.9,535-க்கும், பவுனுக்கு ரூ.1,040 உயா்ந்து ரூ.76,280-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ரூ.77,000-ஐ நெருங்கும் தங்கம்

இந்நிலையில், சனிக்கிழமை தங்கத்தின் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை ன ஒரே நாளில் 2 முறை உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.130 உயா்ந்து ரூ.9,535-க்கும், பவுனுக்கு ரூ.1,040 உயா்ந்து ரூ.76,280-க்கும் விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.9,620-க்கும், பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையாகிறது.

அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை

இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3 உயா்ந்து ரூ.134-க்கும், கிலோவுக்கு ரூ.3,000 உயா்ந்து ரூ.1.34 லட்சத்துக்கும் விற்பனையானது.

இந்தியா மீதான அமெரிக்க அரசின் கூடுதல் வரி விதிப்பால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதே உள்நாட்டில் தங்கத்தின் விலை திடீா் உயா்வுக்குக் காரணம் என கூறப்படுகிறது.

Gold price hits new high

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com