
புது தில்லி: பண்டிகை காலங்களையொட்டி, தாங்கள் வழங்கும் கார் மற்றும் அடமானக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை, பொதுத் துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா வங்கி குறைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தில் 100 அடிப்படை புள்ளிகள் குறைப்பைத் தொடர்ந்து வங்கி செயல்படுத்திய விகிதக் குறைப்புகளுக்கு கூடுதலாக இந்த வட்டி விகித குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் பண்டிகை காலங்களையொட்டி, தாங்கள் வழங்கும் கார் மற்றும் அடமானக் கடன்களுக்கு ஒரு சிறப்பு சலுகையாக வட்டி விகிதங்களை குறைத்து அறிமுகப்படுத்துவதில் வங்கி மகிழ்ச்சி அடைகிறது.
அதன்படி, வங்கியின் கார் கடன் திட்டங்களுக்கு முன்னர் ஆண்டுக்கு 8.40 சதவீத வட்டியுடன் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது ஆண்டுக்கு 8.15 சதவீதி வட்டியுடன் தொடங்குகின்றன. இந்த குறைக்கப்பட்ட வட்டி விகிதம் புதியதாக கார் வாங்குவதற்கான கடன்களுக்கும் பொறுந்தும்.
இதுமட்டுமின்றி, சொத்து அடமானக் கடன்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.85 சதவீதத்தில் இருந்து 9.15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி விகிதக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்பைத் தொடர்ந்து, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல பொதுத்துறை வங்கிகள் சமீப மாதங்களாக தாங்கள் வழங்கும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைந்துள்ளன. ஆனால் தனியார் வங்கிகள் வட்டி விகிதம் குறைப்பில் தயக்கம் காட்டி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.