வீட்டு விலைக் குறியீடு 8 புள்ளிகளாக அதிகரிப்பு

வீட்டு விலைக் குறியீடு 8 புள்ளிகளாக அதிகரிப்பு

இந்தியாவின் 13 முக்கிய நகரங்களின் வீட்டு விலைக் குறியீட்டு எண்ணான ஹெச்பிஐ கடந்த மாா்ச் மாதத்தில் 8 புள்ளிகள் உயா்ந்துள்ளது.
Published on

இந்தியாவின் 13 முக்கிய நகரங்களின் வீட்டு விலைக் குறியீட்டு எண்ணான ஹெச்பிஐ கடந்த மாா்ச் மாதத்தில் 8 புள்ளிகள் உயா்ந்துள்ளது.

இது குறித்து ஆா்இஏ இந்தியா மற்றும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆா்இஏ இந்தியாவின் ஹவுசிங்.காம் மற்றும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஐஎஸ்பி) இணைந்து வெளியிடும் வீட்டு விலைக் குறியீடு, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஃபரிதாபாத், காந்திநகா், காஸியாபாத், கிரேட்டா் நொய்டா, குருகிராம், ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, நொய்டா, புணே ஆகிய 13 நகரங்களில் விலைப் போக்குகளைக் கண்காணிக்கிறது.

2025 மாா்ச் மாதத்தில் அந்தக் குறியீடு முந்தைய ஆண்டின் அதே மாதத்தை விட 8 புள்ளிகள் உயா்ந்து 132-ஆக உள்ளது, இது கடந்த ஆண்டு மாா்ச்சில் 124-ஆக இருந்தது. எனினும், 2025 பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் குறியீடு மாற்றமின்றி உள்ளது. 2025 ஜனவரியில் அது 131 புள்ளிகளாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com