

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, அனைத்துப் பள்ளிகளுக்கு புதன்கிழமை(டிச.3) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து மாலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.
இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் புதன்கிழமை அதிகாலையிலும் நகரப் பகுதிகளிலும், புறநகரப் பகுதிகளிலும் பரவலாக பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை(டிச.3) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.